சில நாட்களுக்கு முன் தமிழ் வலைப்பதிவுகளை படிக்க நேரிட்டது (தற்செயலாக தான்), படிக்கும் பொழுது மனதில் ஏதோ ஒரு சந்தோஷம். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நிறைய தமிழ் புத்தகங்கள், நாவல்கள், கதைகள், பத்திரிகைகள் படித்ததுண்டு. அதற்கு பின் எல்லாம் அப்படியே நின்று விட்டது. எப்பொழுதாவது தமிழ் செய்தித்தாள் படிப்பதோடு சரி. நேற்றைக்கு பிளாக்கர்-இல் ஒரு கணக்கை துவங்கலாம் என்று அதின் அம்சங்களை ஆராய்ந்து கொண்டிருந்தேன். ஆங்கிலத்தில் தான் தொடங்க வேண்டும் என்று ஆரம்பித்தேன். பிளாக்கர்-இல் உள்ள மொழிபெயர்க்கும் அம்சத்தை தேர்வு செய்திருக்கிறேன் (எனக்கு தெரியாமலே), ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு. பின்னர் பதிவு செய்யலாம் என்று தொடங்கியபோது தமிழில் மாறியது. மிகவும் சந்தோஷத்துடன் தமிழிலும் பதிவு செய்ய முடிவு செய்தேன் - அது தான் என்னுடைய முந்தைய பதிவு (நேற்று பதிவு செய்தது).
தமிழ் பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)